தேர்தல் நடவடிக்கை தொடர்பில் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூட்டணியின் குருணாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்சவுக்க சவால் விடுத்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
வாக்களிக்குமாறு மஹிந்த ராஜபக்ச வீடு வீடாக செல்வதற்கு ஆயத்தமாகியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்கு கிடைப்பதனை விட மக்களுக்காக செயற்படுவதே அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குருணாகல் மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெறுவது உறுதி என அவர் மேலும் கூறியுள்ளார்.


0 Comments