Subscribe Us

header ads

புத்தளத்தில் மனித உரிமைகள் சான்றிதழ் பாடநெறி

-THE PUTTALAM TIMES-


கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் மனித உரிமைகள் கற்கை மையம் WODEPT நிறுவனம் மற்றும் கருவலகஸ்வெவ - புத்தளம் மனித உரிமைகள் சமூக மையம் என்பன இணைந்து 2015 ஆகஸ்ட் மாதம் 29 முதல் நடத்தவுள்ள மனித உரிமைகள் தொடர்பான மூன்று (3) மாத சான்றிதழ் பாடநெறிக்கான விண்ணப்பம் கோரப்படுகின்றது.

அரச, அரச சார்பற்ற மற்றும் சிவில் சமூக அமைப்புக்களில் பணியாற்றும் 20 வயதுக்குக் குறையாத ஆண் பெண் இரு பாலாரும் இப் பாடநெறியைப் பயில்வதற்கு விண்ணப்பிக்க முடியும்.

வகுப்புக்கள் 220/1, கொழும்பு வீதி, பாலாவியில் அமைந்துள்ள WODEPT நிறுவன பயிற்சி நிலையத்தில் சனிக்கிழமை நாட்களில் நடைபெறும்.

மொழி மூலம்: தமிழ்/ சிங்களம் (சமகால உரைப் பெயர்ப்புடன்)

இலக்கக் குழு 1
கிராம செயற்பாட்டு குழு அங்கத்தவர்கள்
(WODEPT நிறுவனம் சேவை புரியும் கிராமங்களில் உள்ள அமைப்பு)
பதிவுக் கட்டணம்: 500.00
பாடநெறிக் கட்டணம்: 1,000.00

இலக்கக் குழு 2
அரச, அரச சார்பற்ற நிறுவன உத்தியோகத்தகர்கள் மற்றும் சமூக சேவையில் ஈடுபடும் சமூக சேவையாளர், சிவில் சமூக அங்கத்தவர்கள்.
பதிவுக் கட்டணம்: 500.00
பாடநெறிக் கட்டணம்: 2,000.00

தகைமைகள்:
க.பொ.த (உ/த) கலை/ வணிக/ விஞ்ஞானம் சித்தி அல்லது,
க.பொ.த (சா/த) உடன் இரண்டு வருட சமூக சேவை அனுபவம்

விண்ணப்பிக்கும் முறை:
முதலெழுத்துக்களுடன் பெயர், சொந்த மற்றும் தொழில் முகவரி, பால், பிறந்த திகதி, தேசிய அடையாள அட்டை எண், அதிகூடிய கல்வித் தகைமையும் பிற தகைமைகளும், தொலைபேசி இலக்கம் மற்றும் சமூக சேவை அனுபவம் ஆகியவை உள்ளடக்கப்பட்ட விண்ணப்பப் படிவங்களை தயாரித்து அல்லது எமது நிறுவனத்திலுள்ள விண்ணப்பப்படிவத்தை பெற்று பூர்த்திசெய்து கீழ் குறிப்பிடப்படும் முகவரிக்கு அனுப்பவும்.

Executive Director,
WODEPT,
No: 220/1,
Colombo Road,
Palavi – 61280
Tele: 032 22 69441077 595 1211

விண்ணப்பப்ங்கள் ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி: 2015 ஆகஸட் மாதம் 15

புத்தியாகம சந்திரரத்ன தேரர்                            T.L.M. மக்கீன்
இணைப்பாளர்                                                     நிறைவேற்றுப் பணிப்பாளர்
மனித உரிமைகள் சமூக மையம்                     WODEPT
புத்தளம்                                                                பாலாவி, புத்தளம்.

Post a Comment

0 Comments