முதன் முறையாக சந்திர னில் கால்பதித்த ஆம்ஸ்ட் ராங்கின் விண்வெளி உடையை பாதுகாக்க நிதி திரட்டும் திட்டத்தை அமெரிக்க காட்சியகம் மேற்கொண்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ‘நாசா’ விண்வெளி மைய வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங். இவர் அப்பல்லோ 11 விண் கலம் மூலம் சந்திரனுக்கு பயணமானார். அங்கு முதன் முதலில் கால் பதித்து அமெரிக்க கொடியை நாட்டி னர்.
இச்சம்பவம் கடந்த 1969–ம் ஆண்டு ஜூலை 20–ந்தேதி நடந்தது. அவர் சந்திரனில் இறங்கி கால்பதித்த 46–வது ஆண்டு விழா அமெரிக்கா வில் நேற்று கொண்டாடப் பட்டது.
சந்திரனுக்கு சென்ற போது அவர் அணிந்திருந்த விண்வெளி உடை அமெ ரிக்கா தலைநகர் வாஷிங்ட னில் உள்ள நேசனல் ‘ஏர் அண்ட் ஸ்பேஷ்’ அருங்காட்சி யகத்தில் கடந்த 2006–ம் ஆண்டு முதல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அந்த உடையை குறைந்த காலமே பாதுகாக்க முடியும். விசேஷமாக தயாரிக் கப்பட்ட அதன் நூலிழை கள் நீண்ட நாட்கள் தாக்கு பிடிக்காமல் சிதைந்து விடும். தற்போது, நீல் ஆம்ஸ்ட் ராங்கின் விண்வெளி ஆடைக்கும் அதே நிலைதான் ஏற்பட்டுள்ளது.
எனவே, அதை பாது காக்க அருங்காட்சியகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக ரூ.3 கோடியே 25 லட்சம் தேவைப்படுகிறது. அதற்காக நிதியை திரட்டும் பணியை மேற் கொண்டு பிரசாரத்தை தொடங்கியுள் ளது.
இந்த நிதியின் மூலம் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் விண்வெளி உடையை பாதுகாக்கும் தட்பவெப்பநிலையுடன் கூடிய ‘ஷோ கேஸ்’ தயாரிக்கப் படுகிறது. விண்வெளி உடையை அதில் வைத்து பாதுகாக்கப்பட உள்ளது.





0 Comments