ஸ்பெயினில் பேய் நடமாட்டம் உள்ளதாக கருதப்படும் விமான நிலையம் அடிமாட்டு விலைக்கு ஏலம் கேட்கப்பட்டுள்ளது.
ஸ்பெயி்ன் நாட்டில் உள்ள மேட்ரிட்டில், ஒரு பில்லியன் யூரோ செலவில் மத்திய விமான நிலையம் கட்டப்பட்டு கடந்த 2008 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. ஆரம்பம் முதலே அதிக அளவிலான பயணிகளை இந்த விமான நிலையம் ஈர்க்காததால் கடந்த 2012 ஆம் ஆண்டு இந்த முனையம் மூடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஆளரவம் இல்லாமல் வெறிச்சோடி இருக்கும் இந்த விமான நிலையத்தில், பேய் நடமாட்டம் இருப்பதாக தெரிகிறது. இது தொடர்பான வதந்திகள் அப்பகுதியில் வைரலாக பரவத் தொடங்கியது. பகல் நேரத்தில் கூட அப்பகுதிக்குச் செல்ல சிலர் அஞ்சி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து விமான நிலையத்தை விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டது. ஏல அதிகாரிகள் தொடக்க விலையாக 28 மில்லியன் யூரோவை முன்வைத்தனர். ஆனால் அந்த தொகை அளிக்க யாரும் முன்வரவில்லை. இறுதியாக வெறும் 6 ஆயிரத்து 900 யூரோக்களுக்க விலை கோரப்பட்டது. இதனையடுத்து உரிய விலை படியாததால் ஏலம் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


0 Comments