பாலஸ்தீனத்தைச் சேர்ந்த டீன்ஏஜ் சிறுமி ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடந்த டி.வி. விவாதத்தில் கலந்து கொண்டார். அதில் பிரதமர் ஏஞ்சலா மெர்கலும் பங்கேற்றார்.
அப்போது பேசிய சிறுமி தான் ஜெர்மனியில் தங்க அடைக்கலம் தர வேண்டும் என கூறி பிரதமர் மெர்கலிடம் கண்ணீர் விட்டு கதறி அழுதாள். இந்த செய்தி உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தற்போது அந்த சிறுமிக்கு ஜெர்மனி அடைக்கலம் கொடுத்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜெர்மனி மந்திரி அய்டன் ஓஷோகுஷ் கூறும்போது, ‘‘அந்த சிறுமியின் நிலை பற்றி எனக்கு தெரியாது. ஆனால் அவள் சரளமாக ஜெர்மனியில் பேசுகிறாள். இங்கு அவளால் நீண்ட நாட்கள் வாழ முடியும்’’ என்றார்.


0 Comments