Subscribe Us

header ads

புத்தளம் மாவட்டத்தில் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் பிரபல வேட்பாளரது வீட்டிலிருந்து ஒரு தொகை அலுமினியப் பாத்திரங்கள்

-ஹிரான் பிரியங்கர 


எதிர்வரும் பொதுத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் பிரபல வேட்பாளரது வீட்டிலிருந்து ஒரு தொகை அலுமினியப் பாத்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.  

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் புதன்கிழமை (22) குறித்த வேட்பாளரது வீட்டை சேதனையிட்ட போது இருபதுக்கும் மேற்பட்ட அலுமினியப் பாத்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.  

இவை பொதுத் தேர்தலின் பொருட்டு மக்களுக்கு வழங்குவதற்காக அவரது வீட்டில் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்தாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது. 

குறித்த நபரை கைது செய்துள்ள நவகத்தேகம பொலிஸார், ஆணமடுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். 


Post a Comment

0 Comments