– அஷ்ரப் ஏ சமத் –
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முஸ்லிம்களின் இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டு மிகவும் கடுமையான தொனியில் பேசிய சம்பவம் ஒன்று நேற்று கொழும்பில் இடம்பெற்றது.
தெஹிவளை மேயரும், ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற வேட்பாளருமான தனசிரி அமரசிங்க வீட்டில் முஸ்லிம்களுக்கு ஏற்பாடு செய்யபட்டிருந்த இப்தார் நிகழ்வின் போதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அங்கு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ;
நீங்களும் இறைவனைத்தான் நம்புகிறீர்கள், நானும் இறைவனைத்தான் நம்புகிறேன். அவன் உங்களது செயல்களை பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றான். நீங்கள் கடந்த முறை என்னை ஆதரிக்கவில்லை. உங்களுக்கு விடுதலைப் புலிகள் செய்த கொடுமைகளுக்கு தீர்வு கண்டு அவர்களை அழித்து உங்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை ஏற்படுத்தித் தந்தேன். இது இப்தார் நிகழ்வு, இங்கு நான் அரசியல் பேச விரும்பவில்லை என அவர் தெரிவித்தார்.
இந்த இப்தார் நிகழ்வில் தெஹிவளையில் வாழும் பெரும் தொகையான முஸ்லிம்கள் உட்பட முன்னாள் ஆளுநர் அலவி மொலான, தெஹிவளை மாநகர உறுப்பினர் ஹமீட் ஆகியோரும் கலந்துகொண்டனர்.





0 Comments