Subscribe Us

header ads

எனக்கு வேட்பு மனு வழங்காதவர்களை மன்னிக்கின்றேன் - மேர்வின் சில்வா


தமக்கு வேட்பு மனு வழங்காதவர்களை மன்னிப்பதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

மேர்வின் சில்வா அண்மையில் களனி தேர்தல் தொகுதியின் அமைப்பாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸக்களின் சூழ்ச்சித் திட்டம் காரணமாக தமக்கு வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக அவர் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கட்சிக்கு ஆதரவான மக்களினால் மட்டுமே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை மற்றும் கம்பஹா மாவட்ட மக்கள் தமக்கு வழங்கி வந்த ஆதரவிற்கு நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, களனி தேர்தல் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதம அமைப்பாளராக திலக் வராகொட நியமிக்கப்பட்டுள்ளார்.
 

Post a Comment

0 Comments