Subscribe Us

header ads

விமான நிலையங்களும் அதிவேக நெடுஞ்சாலைகள் நாட்டுக்கு மிகவும் முக்கியமானதல்ல – மல்வத்து பீடாதிபதி


விமான நிலையங்களும் அதிவேக நெடுஞ்சாலைகளும் நாட்டுக்கு மிகவும் முக்கியமானதல்ல என மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் முன்னாள் ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட சகல அபிவிருத்திப் பணிகளும் பிரயோசனமானது என கருத முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை மக்கள் உணவும் குடிநீரையுமே கோருவதாகவும் விமான நிலையங்களை அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மல்வத்து பீடாதிபதியை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் பிளவை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும், அபிவிருத்திப் பணிகளை இடைநிறுத்த முயற்சிப்பதாகவும் பிரசன்ன ரணதுங்க குற்றம் சுமத்தியிருந்தார். கூட்டமைப்பில் அதிகளவு கட்சிகள் அங்கம் வகிப்பதாகவும் இதில் சில சுயலாப நோக்கில் செயற்பட்டு வருவதாகவும் மல்வத்து பீடாதிபதி தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments