முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனியான
ஓர் கூட்டமைப்பில் போட்டியிடுவார் என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி
அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கட்சிக்குள் இருந்து கொண்டு காலைப்
பிடித்து இழுப்பது மிகவும் ஆபத்தானது. எனவே நம்பிக்கையானவர்களை
இணைத்துக்கொண்டு தேர்தலில் போட்டியிடுவது உசிதமானது.
உள்ளே இருந்து கொண்டு குழி வெட்டியதன் காரணமாகவே மஹிந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தார்.
இதேவேளை, முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்க
கூட ஓர் தடவை வண்டிச் சில்லு சின்னத்தில் போட்டியிட்டிருக்கின்றார் என
பசில் தெரிவித்துள்ளார்.
மேலும், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி
ஒன்றை அமைக்க விரும்புவோரே இன்று சுதந்திரக் கட்சியில் அங்கம்
வகிக்கின்றனர் என அவர் சிங்கள இணையத்தளமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.


0 Comments