Subscribe Us

header ads

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் செயற்பட்ட இலங்கையர் குறித்து விசாரணை


சிரியாவில் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்பில் இணைந்து கொண்டு கொல்லப்பட்ட இலங்கையர் ஒருவர் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் உடனடியாக கவனம் செலுத்தியுள்ளார்.
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட  இலங்கையர் மத்திய மாகாணத்தைச் சேர்ந்தவர் என்பதால் பொலிஸ் மா அதிபர் இவர் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு மத்திய மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரை நியமித்துள்ளார்.
மத்திய மாகான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபரின் தலைமையிலான குழுவொன்று நேற்று திங்கட்கிழமை முதல் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. குறிப்பிட்ட நபர் இலங்கையில் இருந்து எவ்வாறு சிரியாவுக்குச் சென்றார்? சிரியாவுக்குச் செல்வதற்கான விசாவினை எவ்வாறு பெற்றுக்கொண்டார்? போன்ற விபரங்கள் உட்பட அனைத்து தகவல்களையும் நியமிக்கப்பட்ட குழு திரட்டவுள்ளது.
சிரியாவில் கொல்லப்பட்ட நபர் ஆறு பிள்ளைகளின் தந்தையாவார். ஏழாவது குழந்தையை அவரது மனைவி பிரசவிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பல மொழிகளைப் பேசக்கூடிய இவர் பாகிஸ்தானில் சட்டத்துறை பயின்று பட்டம் பெற்றவராவார். மத்திய மாகாணத்தில் குருந்துகொல்லயைச் சேர்ந்த இவரது குடும்பத்தினரின் வாக்கு மூலங்களும் பொலிஸாரினால் பெற்றுக் கொள்ளப்படவுள்ளன.

Post a Comment

0 Comments