Subscribe Us

header ads

ஹை-ஹீல்ஸ் ஆபத்து









எலும்புகளில் கால்சியம் அளவு குறைந்து, விரிசல்கள், முறிவுகள் ஏற்படலாம். நரம்புகளை கிள்ளும் உணர்வால் அதிகபட்சவலி ஏற்படலாம். காலை உயர்த்திய நிலையிலேயே வைத்திருப்பது, குறுகிய கால்தசைநார் வலியை உருவாக்கலாம். இதனால் தட்டையான காலணிகளை அணிய முடியாமல் போகலாம். முதுகெலும்பு நகர்வு, அதன் மீது அதிகபட்ச அழுத்தம் அல்லது மூட்டிணைப்பு இடம் நகர்வு போன்ற உடல் தோற்ற பிரச்சினைகளுக்கு ஹை-ஹீல்ஸ் காரணமாக அமைகிறது.

தொடர்ந்து ஹை-ஹீல்ஸ் அணிவதால் பல்வேறு பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. ஹை-ஹீல்சுக்குள் காலைத்திணிப்பதால் ஒரே நாளில் பாதம் சுமார் 455 கிலோ சக்தியை உள்வாங்குகிறது. பாதத்தில் இருந்து அதிகப்படி ரத்தம் வெளியேறி வீக்கம் உருவாகிறது. இந்த வீக்கத்தை குறைக்க ஒரு நிமிடத்துக்கு ஒருமுறை குளிர்ந்த நீரையும், சுடு தண்ணீரையும் மாற்றி, மாற்றி ஊற்றவும். கடைசியாக குளிர்ந்த நீர் ஊற்றி காயவைக்கவும்.


காலில் வலி, வீக்கம் அதிகமானால் காலணிகளை கழற்றிவிட்டு அமருங்கள். சிறிய பந்தின் மீது காலை வைத்து உருட்ட வேண்டும். அடுத்த காலுக்கு மாற்றி அதையே செய்யவும். கோலிக் குண்டுகளை தரையில் சிதறச்செய்து கால்விரல்களால் ஒவ்வொன்றாக பற்றி எடுக்கவும். கால்விரல்களை கீழ்நோக்கி நீட்டவும். பின்னர் மேல்நோக்கி வளையுங்கள். இதை தலா 6 முறை செய்தால் நல்லது.


Post a Comment

0 Comments