அபு அலா –
நோன்புப் பெருநாளை முன்னிட்டு அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் நோன்புப் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்வு நேற்று புதன்கிழமை (22) வைத்தியசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வைத்தியசாலை டாக்டர்கள், உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் மற்றும் இன்று வைத்தியசாலைக்கு வருகை தந்தவர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
இங்கு வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் கூறுகையில்,
இந்நிகழ்வானது, இனமத நல்லுரவை பேனும் நோக்கிலும், வைத்தியசாலையில் கடமையாற்றும் டாக்டர்கள், உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் என்ற பாகுபாடின்றி எல்லோரும் மனிதர்கள் என்ற உணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த நோன்புப் பெருநாள் ஒன்று கூடலை இன்றைய தினம் ஏற்பாடு செய்துள்ளோம்.
இந்த ஒன்று கூடல் நிகழ்வை டாக்டர், உத்தியோகத்தர், ஊழியர் என்ற வித்தியாசங்ளை மறந்து மிக ஒற்றுமையுடன் செயற்பட்ட உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை இந்த இடத்தில் தெரிவிப்பதில் நான் பெருமிதமடைகின்றேன். என்று வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் மேலும் தெரிவித்தார்.





0 Comments