சவுதி அரேபியா இளவரசரை தொடர்ந்து கல்வி அறக்கட்டளைக்கு தனது சொத்தில் மூன்றில் ஒரு பங்கை தானம் செய்த அமீரக செல்வந்தர்.
சவுதி அரேபியா இளவரசரை தொடர்ந்து,அமீரக செல்வந்தர் திரு.Abdullah Ahmed Al Ghurair அவர்கள் தனது சொத்தில் மூன்றில் ஒரு பங்கை கல்வி அறக்கட்டளைக்கு தானம் செய்துள்ளார். இவர் துபாயில் பிரபலமாக அறியப்படும் Mashreq bank,Al Ghurair Construction, Al Ghurair RealEstate போன்ற நிறுவனங்களின் ஸ்தாபகர் ஆவார்.
அமீரக செல்வந்தர் திரு.Abdullah Ahmed Al Ghurair அவர்கள் உலக பணக்காரர்கள் பட்டியலில் 220–வது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் தற்போதைய சொத்து மதிப்பு சுமார் $6.4bn (Dh23.5bn) என கணக்கிடப்பட்டுள்ளது.


0 Comments