தன்னால் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் வழக்கு தொடுப்பதற்கு மஹிந்த ராஜபக்ச நடவடிக்கை மேற்கொள்வதனை அறிந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நீதிமன்றில் இது தொடர்பில் கருத்து தெரிவிப்பதற்கும் விருப்பத்துடனே இருக்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான் வெளியிடும் கருத்துகளுக்கு எதிராக வழக்கு தொடுப்பார்களாம் என்று சிலர் கூறுகின்றார்கள்.
மஹிந்த ராஜபக்சவை நீதிமன்றில் சந்திப்பதில் நானும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்.
ஏன் என்றால் அவர் தொடர்பில் மேடைகளில் மாத்திரம் கருத்து வெளியிடுவதில் பயனில்லை.
மஹிந்த ராஜபக்சவுக்கு முன் நின்று அவரது முகத்திற்கு நேராக கூற வேண்டியதனை கூற வேண்டும் என அவர் மேலும குறிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.


0 Comments