Subscribe Us

header ads

அரசியல்வாதிகளுக்கு பண்பு சான்றிதழ் வழங்க மாட்டேன்: சோபித தேரர்


கடந்த சில நாட்களாக பண்பு சான்றிதழ் பெற்றுக்கொள்வதற்கு தன்னிடம் வந்த வேட்பாளர்கள் சிலரை திருப்பி அனுப்பியதாக நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளர் மாதுளுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் துண்டுப் பிரசுரங்கள் மற்றும் விளம்பரங்களுக்கு தனது கருத்துக்கள் மற்றும் சான்றிதழ் பெற்றுக்கொள்வதற்கு குறித்த வேட்பாளர்கள் முயற்சிகளை மேற்கொள்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அவர்களை கோட்டை ஸ்ரீ நாக விகாரைக்கு வருகை தந்ததாகவும், தனிப்பட்ட ரீதியில் வந்த குறித்த வேட்பாளர்கள் பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் என அவர் கூறியுள்ளார்.

எந்த ஒரு அரசியல்வாதிக்கும் தான் பண்பு சான்றிதழ் வழங்கப் போவதில்லை எனவும் சுயாதீனமாக செயற்படுவதற்கே சிந்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் 49 அமைப்புகள் இணைந்து முன்வைத்த யோசனைகளை செயற்படுத்துவதற்கு அவசியமான ஆதரவினை வழங்குவதாகவும் சோபித தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments