Subscribe Us

header ads

பிரதம வேட்பாளராக ஞானசார களத்தில் ;குருநாகல் அல்லது கண்டியில் போட்டி


இந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கமாட்டோம் என்று, சிங்கள கடும்போக்குவாத அமைப்பான பொது பல சேனா அறிவித்துள்ளது.

பொது பல சேனாவின் தேசிய அமைப்பாளர் வண.விதாரந்தெனியே நந்த தேரர், நேற்று செய்தியாளர்களிடம் தமது இந்த முடிவை அறிவித்தார்.

“அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளித்திருந்தாலும், இம்முறை அவருக்கு நாம் ஆதரவளிக்கமாட்டோம்.

நாடாளுமன்றத் தேர்தலில் எந்தவொரு பிரதான அரசியல் கட்சியுடனும் பொது பல சேனா கூட்டணி அமைக்காது.

இந்த தேர்தலில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று பேரை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப முடியும் என்று பொது பல சேனா நம்புகிறது.
நாகபாம்பு சின்னத்தில், பொது ஜன பெரமுனவின் கீழ் தேர்தலில் போட்டியிடுவோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


அத்துடன் பிரதம வேட்பாளராக ஞானசார தேரர் களமிறங்கவுள்ளார் என தகவல்கள் குறிப்பிடுகின்றன. இவர் குருநாகல் அல்லது கண்டி மாவட்டத்தில் போட்டியிடவார் என்றும் பொதுபலசேனா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன

Post a Comment

0 Comments