Subscribe Us

header ads

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இயற்கை எய்தினார்


பழம்பெரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் தனது 87 ஆவது வயதில் இன்று (14)  காலமானார்.

தமிழ் திரையுலகின் மெல்லிசை மன்னர் என்று அழைக்கப்படுவர் எம்.எஸ்.விஸ்வநாதன். இவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர்  மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள்.

உடல்நிலை சீரானதைத் தொடர்ந்து வீட்டுக்கு அழைத்து செல்ல குடும்பத்தினர் முடிவு செய்த நேரத்தில், மீண்டும் எம்.எஸ்.விஸ்வநாதனின் உடல்நிலை மோசமடைந்தது.

இந்நிலையில் இன்று (14) அதிகாலை 4:15 இற்கு சிகிச்சை பலனின்றி அவருடைய உயிர் பிரிந்தது. சென்னை சாந்தோமில் உள்ள அவரது இல்லத்தில் திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவருடைய உடல் வைக்கப்பட்டுள்ளது.


எம்.எஸ்.விஸ்வநாதனின் இறுதிக் கிரியைகள் நாளை (15)  காலை நடைபெறவுள்ளது.

Post a Comment

0 Comments