Subscribe Us

header ads

அரச பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்றுடன் நிறைவு


அனைத்து அரச பாடசாலைகளிலும் இந்த ஆண்டுக்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு பெறுகின்றது.  
கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நடைபெறாத பாடசாலைகள் எதிர்வரும் ஆகஸ்ட் 31 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் எனவும் பரீட்சைகள் நடைபெறும் பாடசாலைகள் செப்டம்பர் 09 ஆம் திகதி மூன்றாம் தவணைக்காக மீண்டும் திறக்கப்படும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் உபாலி மாறசிங்க தெரிவித்தார்.
இதனிடையே கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் ஆகஸ்ட் 04 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு செப்டம்பர் 08 ஆம் திகதி வரை நடைபெறும் எனவும் 05 தரம் புலமை பரீட்சை ஆகஸ்ட் 23 ஆம் திகதி நடைபெறும் எனவும் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments