Subscribe Us

header ads

சௌ சௌ ரெய்தா


தேவையான பொருட்கள்:

சௌ சௌ - 1,

வெங்காயம் - 1

தயிர் - 1 கப்,

எண்ணெய் - 1 ஸ்பூன்,

கொத்தமல்லி இலை,

பச்சை மிளகாய்

தாளிக்க :

கடுகு,

உளுந்தம்பருப்பு,

பெருங்காயம்,

கறிவேப்பிலை,

செய்முறை :

• சௌ சௌ காயை தோல் நீக்கி பொடியாக நறுக்கி சிறிது உப்பு சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும்.

• வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய்,

வெங்காயம், பெருங்காயம் போட்டு வதக்கி தயிரில் சேர்க்கவும்.

• சௌ சௌ நன்றாக ஆறினவுடன் அதையும் தயிரில் சோர்த்து நன்றாக கலக்கவும்.

• கடைசியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

• இந்த சௌ சௌ ரெய்தா சப்பாத்திக்கு மிகவும் சுவையாக இருக்கும்


மேலும் சமையல் குறிப்புக்களை பெற : பாய் கடை சமையல் LIKE THIS PAGE

Post a Comment

0 Comments