Subscribe Us

header ads

சீனி கூட்டுத்தாபணம் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினர் இணைந்து மேற்கொண்ட கரும்பு அறுவடை நிகழ்வு

அபு அலா -


சிவில் பாதுகாப்பு படையின் பணிப்பாளர் மற்றும் ஹிங்குரான சீனி கூட்டுத்தாபணம் இணைந்து மேற்கொண்ட கரும்பு அறுவடை செய்யும் ஆரம்ப கட்ட நிகழ்வு இன்று காலை புதன்கிழமை (08) தீகவாபி வலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சிவில் பாதுகாப்புப் படையின் அம்பாறை பகுதி கட்டளையிடும் அதிகாரி மேஜர் வர்ணகுல சூரிய தலைமையில் இடம்பெற்ற இந்த கரும்பு அறுவடை நிகழ்வில் ஹிங்குரான சீனி கூட்டுத்தாபனத்தின் பயிர் செய்கைப் பிரிவின் பிரதி பொது முகாமையாளர் டீ.நயனா அபயசேகர, பயிர் செய்கை முகாமையாளர் எ.எம்.ஹரீஸ், உப பொலிஸ் பரிசோதகர் ரீ.எச்.அதான் உள்ளிட்ட பல சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் படையினர் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் கரும்பு அறுவடை செய்வதற்கான ஆயுதங்கள் மற்றும் தளபாடங்களும் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.








Post a Comment

0 Comments