ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்தன் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஆரம்பமான அதிகார போராட்டம், நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின் புதிய களத்தை நோக்கி தள்ளப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலில் போட்டியிட போவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ள போதிலும் போட்டியிடும் கட்சி மற்றும் கூட்டணி பற்றி பல அனுமானங்களும் யூகங்களும் வெளியிடப்பட்டு வருகின்றன.
அதிகாரப் போட்டிக்கு இணையாள இந்த அனுமானங்களும் யூகங்களும் மாற வாய்ப்புள்ளது.
இந்த அனுமானங்கள் மற்றும் யூகங்கள் இடையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலம் பற்றி மாத்திரமல்ல அடுத்த நாடாளுமன்றம் எப்படி அமைய போகிறது என்ற வாத விவாதங்களும் ஏற்பட்டுள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுப்படுவது தவிர்க்க முடியாத யதார்த்தமாகும் என ராவய பத்திரிகையின் ஸ்தாப ஆசிரியரான சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவானவர்கள் இதனால் அதிருப்தியடையலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சமூகத்திற்குள் அலை ஒன்றை ஏற்படுத்த முடிந்தாலும் அவரால் கட்சிக்குள் தீர்மானகரமான அழுத்தங்களை ஏற்படுத்த முடியாது போயுள்ளதாக ஊடகவியலாளர் குசால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
இதனால், முன்னாள் ஜனாதிபதி ஒரு அடியை பின்னுக்கு வைத்து சமூகத்தில் தனது தோற்றத்தை கட்டியெழுப்ப பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலைமையால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுப்படாது என்றும் குசால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே மகிந்த ராஜபக்ச தற்போது சமூகத்தில் போதுமான அதிகாரத்தை கைப்பற்றியுள்ள போதிலும் எந்த அரசியல் கட்சியின் ஊடாக அவர் தேர்தலில் போட்டியிட்டாலும் அவரை தோற்கடித்து ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தை ஏற்படுத்த முடியும் என பிரஜைகள் அமைப்புகளின் ஒன்றியத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் சமன் ரத்னபிரிய கூறியுள்ளார்.
மைத்திரிபால சிறிசேனவை அதிகாரத்திற்கு கொண்டு அக்கறை காட்டிய சிவில் அமைப்புகளின் செயற்பட்டாளர்களின் ஒரு தரப்பினர் நேரடியாக மகிந்த விரோத கோஷங்களுடன் ஐக்கிய தேசியக் கட்சிக்கான குரல் கொடுக்க வாய்ப்பிருந்தாலும் மேலும் சிலர் அதனை வேறான வகையில் தலையீடுகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர் எனவும் ரத்னபிரிய குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகள் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகளுக்கு சாதகமாக அமையும் எனவும் அதில் தனக்கு எந்த சந்தேகமும் இல்லை எனவும் சமூக ஆய்வாளரான காமினி வியாங்கொட குறிப்பிட்டுள்ளார்.


0 Comments