Subscribe Us

header ads

குருநாகல், புத்தளம் களுத்துறை மாவட்ட முஸ்லிம்கள் தமது முஸ்லிம் பாராளமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்து இருப்பது ஒரு வரலாற்று தவறாகும்.


கடந்த ஒரு தசாப்த காலமாக குருநாகல், புத்தளம் களுத்துறை மாவட்ட முஸ்லிம்கள் அரியல்ரீதியாக பிளவு அடைந்ததன் காரணமாக தமது முஸ்லிம் பாராளமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்து இருப்பது ஒரு வரலாற்று தவறாகும்.
களுத்துறை மாவட்டத்தில் ஒரு இலட்சத்தி பதினையாயிரம் முஸ்லிம்கள் வாழுகின்ற அதேவேளை சுமார் என்பதுனாயிரம் வாக்காளையும் கொண்டுள்ளது.மேலும் புத்தள மாவட்டத்தில் ஒரு இலட்சத்து ஐம்பத்தியையாயிரம் முஸ்லிம்கள் வாழுகின்ற அதேவேளை சுமார் ஒரு இலட்சத்தி ஆறாயிரம் வாக்காளரையும் அதேபோன்று குருநாகலை மாவட்டத்தில் ஒரு இலட்சம் முஸ்லிம்கள் வாழுகின்ற அதேவேளை எழுபத்தி இரண்டாயிரம் முஸ்லிம் வாக்காளர்களையும் கொண்டுள்ளது .
இருப்பினும் இம்மாவட்டத்தில் கடந்த ஒரு தசாப்த கால பகுதில் நடந்த எந்த ஒரு பாராளமன்ற தேர்தலிலும் முஸ்லிம் வேட்பாளர்கள் எந்த ஒரு அரசியல் கட்சியிலிருந்தும் தெரிவு செய்ய படவில்லை என்பது முஸ்லிம் சமூகத்திக்கு ஒரு முக்கிய பின்னடைவாகும் .
ஒவ்வொரு மாவட்டத்திலும் முஸ்லிம்கள் இரண்டு பாராளமன்ற உறுப்பினர்களை பெரும் வாக்குகளை கொண்டு இருந்த போதும் ஒரு பாராளமன்ற உறுப்பினரை கூட பெற முயாது போனமை அம்மாவட்ட முஸ்லிம்களின் ஒற்றுமை இன்மை மற்றும் முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு இடையில் சமூகம் தொடர் பான அக்கறையின்மை போன்றவற்றை குறிப்பிடலாம் .
மேலும் அம்மாவட்ட முஸ்லிம் பெண்கள் வாக்கு அளிப்பதக்கு ஆர்வம் காட்டாமை மற்று மொரு பின்னடைவாகும். இவ்வாறான காரணிகளால் பாராளமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்து அரசியல் ரீதியான அடையாளத்தை தொலைத்து இம்மாவட்ட முஸ்லிம்களும், முஸ்லிம் அரசியல் வாதிகளும் வரலாற்று தவறை ஒரு தசாப்த காலமாக செய்துள்ளமை மிக கண்டிக்க தக்க விடயமாகும்..
இத் தவறின் தாக்கம் கடந்த சில வருடங்களில் முஸ்லிம் சமூகம் மீது குருநாகலை மற்றும் களுத்துறை ,புத்தள மாவட்டங்களில் பௌத்த கடும் போக்கு வாத அமைப்புக்கள் செய்த அட்டூழியங்களின் போது முஸ்லிம்கள் அரசியல் அநாதைகள் என்ற ஒரு முத்திரை இவர்கள் மீது பலமாக பொறிக்கபட்டதை யாரும் மறுக்க முடியாது.
எனவே கடந்த கால வரலாற்று தவறை அழிப்பதிக்கு அல்லது துடைத்து எறிவதற்கு இம்மாவட்ட முஸ்லிம்களுக்கு காலம் ஒரு சந்தர்பத்தை வழங்கி உள்ளது எனலாம்.
இருப்பினும் கடந்த கால தவறை இம்மாவட்ட மக்கள் மீண்டு செய்வார்கள் ஆயின் அவர்கள் மீண்டும் ஒரு வரலாற்று தவறை நோக்கி பயணிப்பர் என்பது மட்டுமே உண்மையும் நிதர்சனமும் ஆகும்.

Post a Comment

0 Comments