தேர்தல் பிரசாரங்கள் மும்முரமாக நடைபெற்று வருகின்ற நிலையில் தமக்கு கட்சியின் பெயர், சின்னம் என்னவென்று தெரியாது முன்னணியின் ஆதரவாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா, வன்னி மாவட்டங்களில் தனித்து போட்டியிடும் பிரஜைகள் முன்னணி சார்பில் மலையகத்தில் பல பெண்கள் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் குறித்த கட்சியின் பெயர், கட்சியின் சின்னம் என்னவென்று தெரியாது எனவும் எமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுகொடுத்த பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜே.ஸ்ரீ ரங்காவுக்கே வாக்களிப்போம் எனவும் ஆதரவாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கட்சியில் அங்கம் வகிக்கும் 30 பெண்களுக்கு சாரிகள் வழங்கியுள்ளதாகவும் அதனையே தேர்தல் பிரசார கூட்டங்களுக்கு கட்டிவரவேண்டும் என கோரிக்கை விடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

0 Comments