Subscribe Us

header ads

தேர்தலுக்கான விருப்பு எண்கள் நாளை வழங்கப்படவுள்ளன!


ஆகஸ்ட் 17ம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான வேட்பாளர் விருப்புத் தெரிவு எண்கள் நாளை 16ம் திகதி வழங்கப்படவுள்ளன.

கடந்த திங்கட்கிழமையன்று இறுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்களின் அடிப்படையிலேயே இந்த விருப்பு எண்கள் வழங்கப்படவுள்ளன.

இதற்கான ஆயத்தப்பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணையாளரின் அனுமதியின் பின்னர் அவை வேட்பாளர்களுக்கு வழங்கப்படவுள்ளன.

அதேவேளை, வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் இன்று வழங்கப்படவுள்ளதாக தேர்தல் செயலகம் தெரிவித்ததாக வேறொரு ஊடகத் தகவல் தெரிவிக்கின்றது.

அதில், விருப்பு இலக்கங்கள் மாவட்டச் செயலகங்களிலிருந்து தேர்தல் செயலகத்துக்குக் கொண்டு வரப்பட்டு சிரேஷ்ட அதிகாரிகளால் அது பரீட்சிக்கப்பட்ட பின் தேர்தல் ஆணையாளரின் அங்கீகாரத்துடன் வேட்பாளர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக பிரதித் தேர்தல் ஆணையாளர் எம்.எம். மொகமட் தெரிவித்தார். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments