ஜப்பானின் ஹக்கிஜிமா சீ பேரடைஸ் அக்வாரியத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் கொதிக்கும் வெயிலை மறந்து குளிர்ச்சியுடன் வீட்டுக்கு திரும்புகின்றனர்.
ஜப்பானில் தற்போது 93 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு உக்கிரமான வெயில் நிலவி வருகிறது. இந்த வெயிலை சமாளிக்க அக்வாரியம் போன்ற குளிர்ச்சியான இடங்களுக்கு அந்நாட்டு மக்கள் படையெடுத்து வருகின்றனர். அதுவும், ஹக்கிஜிமா சீ பேரடைஸ் அக்வாரியத்துக்கு செல்வதென்றால் அவர்களுக்கு வகாஷி (அல்வா) சாப்பிடுவது மாதிரி.
காரணம் அங்குள்ள ஆர்டிக் பிரதேசத்தைச் சேர்ந்த வெள்ளைத் திமிங்கலம் பார்வையாளர்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்து விளையாடுகிறது. வெயிலை சமாளிக்க இதைவிட வேறென்ன வேண்டும்?




0 Comments