யாழ்ப்பாண குடாநாட்டில் சோதனைக்குழாய் மூலம் உருவான முதற்குழந்தை நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை பிறந்துள்ளது.
திருநெல்வேலியில் அமைந்துள்ள நெதேர்ண் சென்ரல் வைத்தியசாலை யாழில் அதிகளவான மருத்துவ வசதிகளையுடைய தனியார் வைத்தியசாலையாக மாறி வருகின்றது.
இதன் ஒரு கட்டமாக சோதனைக்குழாய் குழந்தையையும் வெற்றிகரமாக பரசவிக்க வைத்துள்ளனர்.
வைத்திய நிபுணர்களான சுரேஷ்குமார், அருள்மொழி, ஜானகி ஆகியோர் வெற்றிகரமான சத்திரசிகிச்சை மூலம் குழந்தையை பிரசவிக்க வைத்துள்ளனர்.
குழந்தைப் பேறில்லாதவர்கள் சோதனைக்குழாய் மூலம் குழந்தை பெறுவது சாதாரணமானதாக மாறிவரும்போதும், வடக்கிலுள்ளவர்கள் அதற்காக வேறிடம் சென்று பெரும் பணம் செலவிட வேண்டியிருந்தது. இந்தியாவிற்கு அல்லது கொழும்பிற்கு செல்ல வேண்டியிருந்தது.
கடந்த 2014ம் ஆண்டு, சோதனைக்குழாய் மூலம் குழந்தை பிரசவிக்கும் சிகிச்சையை ஆரம்பித்தனர். தற்போது, முதலாவது குழந்தை வெற்றிகரமாக பிரசவிக்கப்பட்டுள்ளது.


0 Comments