Safwan Basheer
வெளிநாட்டுக்கு வந்தால் நாம் விரும்பியோ விரும்பமலோ சில விடயங்களை இழந்துதான் ஆகவேண்டும். நெருக்கமானவர்களின் மரணம், குடும்பத்தினரின் திருமண நிகழ்வுகள் என்று அவை பலவகைப் படுகின்றன. அப்படி இழந்த விடயங்களில் முக்கியமான ஒன்றுதான் எமது ஊரில், பிரதேசத்தில் நடக்கும் சமூகப் பணிகளில் களத்தில் இறங்கி வேலை செய்ய முடியாமல் போவது. தொழில்,அலுவலகம்,வீடு,பொழுது போக்கு என்று கழியும் வெளிநாட்டு வாழ்க்கையில் சமூகத்துக்கு ஏதாவது செய்ய முடியுமென்றால் அது பணத்தால் மட்டுமே சாத்தியப் படுகின்றது.
கத்தார்வாழ் நிகொள்ளை சகோதரர்களினால் ஊரின் கல்வி அபிவிருத்தியை மையமாகக் கொண்டு AMWAN என்ற பெயரில் ஒரு சமூக சேவை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு பல வருடங்களாக மிகச்சிறப்பாக நடத்திச் செல்லப் படுகின்றது.
நிககொள்ளையின் கல்வி வளர்ச்சிக்கு பொருளாதார ரீதியான உதவிகளை வழங்குவதை முதன்மையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இவ்வமைப்பினூடாக ஊரின் அபிவருத்திக்கு அதிகமான பங்களிப்புகள் வழங்கப்பட்டுகின்றது.
AMWAN இன் இவ்விருடத்துக்கான விசேட கலந்துரையாடலும் இப்தார் நிகழ்வும் எதிர்வரும் 09- 07-2015 அன்று ( வியாழக்கிழமை ) Doha- Old Air Port park என்ற இடத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் கத்தார் வாழ் நிககொள்ளை சகோதர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்களால் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.


0 Comments