Subscribe Us

header ads

ஜாக்கிரதை: இனி சுவரில் சிறுநீர் கழித்தால், அது உரிமையாளருக்கே திரும்பி வரும்- புது டெக்னிக்



வளரும் நாடுகள், வளர்ந்த நாடுகள் என்று எந்த வித்தியாசமும் இன்றி உலகம் முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒரு பிரச்சனை பொதுமக்கள் சுவற்றில் சிறுநீர் கழிப்பது. 

‘அதையும் தடுக்க வந்தாச்சு, அட்வான்ஸ்டு டெக்னிக், இனி அப்படி யாரும் செய்ய முடியாது.’ என்று மார் தட்டுகின்றன, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரிலுள்ள அரசு அதிகாரிகள். அப்படி என்ன புது டெக்னிக் என்று கேட்கிறீர்களா?

super hydrophobic paint எனப்படும் அல்ட்ரா வயலட் (UV) கோட்டிங் செய்யப்பட்ட சிறுநீர் தடுப்பு பெயிண்ட். இந்த பெயிண்ட் அடிக்கப்பட்ட சுவற்றில் ஒரு மிஸ்டர். பொதுஜனம் சிறுநீர் கழிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அது நைல் நதியைப் போல், சுவரில் அழகாக வழிந்தோடுவதற்கு பதிலாக, பூமராங்கைப் போல் அந்த சிறுநீரின் சொந்தக்காரரான மிஸ்டர். பொதுஜனத்துக்கே திரும்பி வரும். 

சான் பிரான்சிஸ்கோ பொதுப்பணிக் குழுவினர், நகரின் 10 சுவர்களில் இந்த பெயிண்டை அடித்து விட்டு பொதுமக்களின் ரியாக்‌ஷனுக்காக காத்திருக்கிறார்கள்.

Post a Comment

0 Comments