-The Puttalam Times-
புத்தளம் அரசியல் களத்தில் PPAF ஏற்படுத்தியுள்ள சிந்தனை மாற்றம் வரலாற்றுப் பதிவு. இதுவரை காலமும் புத்தளம் பிரதேச அரசியலில் உள்வீட்டுப் பிரதேசவாதத்தை உருவாக்கி, ஊட்டி, வளர்த்து மனாப (விருப்பு வாக்கு) வேட்டையில் ஈடுபட்ட பெரிய கட்சிகளின் தலையிடியாக PPAF மாறியுள்ளது எனில் மிகையன்று.
கல்பிட்டியில் 'புத்தளத்தானுக்கு ஏன் நாம் வாக்குக் கொடுக்க வேண்டும்?' என்றும், புத்தளத்தில் 'கடையாமொட்டையானுக்கு ஏன் வோட்டு போடனும்?' என்றும், கடையாமோட்டை கணமூலைப் பகுதியில் 'கல்பிட்டியானுக்கு எதுக்கு நம்ம வாக்கு?' என்று மூட்டிவிட்ட பிரதேசவாதத் தீயினால் சுட்ட காயம் 26 வருடங்களாக ஆறாமல் உள்ளது.
இந்நிலையில், PPAF செய்த மாபெரும் சிந்தனை மாற்றம் இந்த உள்வீட்டுப் பிரதேசவாதத்திற்கு வைத்த முற்றுப்புள்ளி ஆகும். அதற்கு இந்த அழைப்பிதழ் ஒன்று போதுமான சான்று. ஒரே மேடையில் இம் மூன்று பிரதேசங்களின் வேட்பாளர்களுக்கான பிரச்சார கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த அதிசயம் இதற்கு முன்னர் எப்போதாவது நடந்துள்ளதா?
அனைவரையும் PPAF அழைக்கின்றார்கள், ஆர்வத்துடன் சென்று பிரதேசவாதம் எனும் கோரப் பிசாசை அழித்தொழிப்போம், இன்ஷாஅல்லாஹ்
- ஹிஷாம் ஹுஸைன் -


0 Comments