Subscribe Us

header ads

'மஹிந்த பயம்' வெறும் மாயை - ரில்வின் சில்வா


பாரிய நிதி மோச­டி­களில் ஈடு­பட்­ட­ தாக குற்றம் சாட்­டப்­பட்­டுள்ள மஹிந்த ராஜ­பக் ஷ பாரா­ளு­மன்றம் வந்­தாலும் அவ­ருக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்கள் விசா­ரிக்­கப்­பட வேண்டும். நீதி­மன்­றத்தின் முன் நிறுத்­தப்­பட வேண்டும் என வலி­யு­றுத்தும் ஜே.வி.பி., தேர்தலில் “மஹிந்த” அச்சம் வெறும் மாயையே என்றும் தெரி­வித்­தது.
பெல­வத்­தை­யி­லுள்ள ஜே.வி.பி. அலு­வ­ல­கத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­யலாளர் மாநாட்டில் உரை­யாற்றும் போதே அதன் பொதுச் செய­லாளர் ரில்வின் சில்வா இவ்­வாறு தெரி­வித்தார்.
இங்கு அவர் மேலும் உரை­யாற்­று­கையில்;
பொலிஸ் மா அதி­ப­ராக பதவி வகித்­தவர் பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­கா­ரி­யாக கீழ் மட்­டத்­திற்கு வந்­தது போன்று மஹிந்த ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்­து­விட்டு கீழ் நிலைக்கு இன்று இறங்கி வந்­துள்ளார். அந்­த­ள­வுக்கு அர­சியல் பதவி பேராசை அவரை ஆட்­கொண்­டுள்­ளது.
ஜனா­தி­ப­தி­யாக ஆட்சி வகித்த காலத்தில் மகிந்த பாரிய நிதி மோச­டி­களில் ஈடு­பட்­ட­தாக குற்றம் சாட்­டப்­ப­டு­கின்­றது.எனவே அவர் தேர்­தலில் வெற்றி பெற்று பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­னாலும் அவர் மீதான குற்­றச்­சாட்­டுக்கள் விசா­ரிக்­கப்­பட வேண்டும். நீதி­மன்­றத்தின் முன் நிறுத்­தப்­பட வேண்டும். தண்­டிக்­கப்­பட வேண்டும்.
முன்னாள் ஜனா­தி­ப­திகள் எவரும் ஓய்­வு­பெற்ற பின்னர் அர­சி­ய­லுக்கு வர­வில்லை.
எனவே முன்னாள் ஜனா­தி­ப­திகள் தொடர்­பான சிறப்­பு­ரி­மைகள் பாது­காப்பு உட்­பட ஏனைய விட­யங்கள் தொடர்­பாக பிரச்­சினை எழ­வில்லை.ஆனால் மஹிந்த அர­சி­ய­லுக்குள் புகுந்து புதுப்­பி­ரச்­சி­னையை உரு­வாக்­கி­யுள்ளார்.
இவ­ருக்கு முன்னாள் ஜனா­தி­ப­திக்­கான சிறப்­பு­ரி­மைகள் வழங்­கப்­ப­டு­வ­தென்­பது தேர்­தலில் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்­க­ளுக்கு அநீதி இழைக்கும் செய­லாகும்.அத்­தோடு இந்தப் பொதுத் தேர்தலில் “மஹிந்த” பயம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது வெறும் மாயையாகும். எதற்கும் மக்கள் அஞ்சத் தேவையில்லை என்றும் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

Post a Comment

0 Comments