தேர்தல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நான்கு அரசியல் கட்சிகளினது பெயர்களும் அதன் சின்னங்களும் மாற்றப்பட்டுள்ளன.
ஜாதிக ஹெலஉறுமையவின் பெயர் ஐக்கிய நல்லாட்சிக்கான தேசிய முன்னணி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு, இதுவரைக்காலமும் ஹெல உறுமையவின் சின்னமாக இருந்த சங்குச் சின்னம் மாற்றப்பட்டு “வைரம்” சின்னமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கையர் தமிழர் மகா சபை இதுவரைக்காலமும் பயன்படுத்திய தோடம்பழச் சின்னத்திற்கு பதிலாக புதிய சின்னமொன்றை தெரிவு செய்துள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் கட்சியின் சின்னமும் மாற்றப்பட்டுள்ளது. அக்கட்சியின் சின்னமான மீன் சின்னம் மாற்றப்பட்டு “கையடக்கத் தொலைபேசி” சின்னம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா தேசிய முன்னணி அக்கட்சியின் பெயரை ஸ்ரீ லங்கா சுதந்திர முன்னணியென்றும் அக்கட்சி இதுவரை காலமும் பாவித்த சின்னமான கிரிக்கெட் மட்டை சின்னம் மாற்றப்பட்டு “பூமொட்டுச்” சின்னம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


0 Comments