ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஐக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு வேட்பு மனு வழங்கப்படுவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கட்சி பிளவடைந்தால் அது ஐக்கிய தேசியக் கட்சிக்கே சாதகத்தன்மையை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதமர் வேட்பாளராக அறிவிக்குமாறு மஹிந்த கோரியதாகவும் அதற்கு ஜனாதிபதி அனுமதியளிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர் குழுத் தலைவர் அல்லது வேட்பாளராக போட்டியிட வேண்டுமென மஹிந்த விரும்பியதாகவும் தெரிவித்துள்ளார்.
வேட்பாளராக அனுமதிப்பதே கட்சியினால் செய்யக்கூடிய உச்சபட்சமான உதவியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சித் தலைவர்கள் கூட்டாக இணைந்து பேசி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மஹிந்தவிற்கு வேட்பு மனு வழங்குவதனால், கட்சிக்கு ஒரு தொகுதி வாக்குகளை இழக்க நேரிடும் என்பதனை ராஜித சேனாரட்ன ஒப்புக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


0 Comments