ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுதி என்ற புரட்சிப்படை போரிட்டு வருகிறது. இந்த படையினர் ஏற்கனவே தலைநகரம் சனாவை கைப்பற்றி இருந்தனர். அதைத்தொடர்ந்து அந்த நாட்டு அதிபர் இன்னொரு முக்கியமான நகரமான ஏடனுக்கு சென்று அங்கிருந்து ஆட்சி புரிந்தார். அந்த நகரையும் கிளர்ச்சி படையினர் கைப்பற்றினார்கள்.
இதனால் அதிபர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டார். ஏமன் அரசுக்கு ஆதரவாக கிளர்ச்சி படையினர் மீது சவுதி அரேபியா விமான தாக்குதல் நடத்தி வருகிறது. அவர்களுடைய உதவியுடன் ஏமன் அரசுப்படையினர் கிளர்ச்சி படையிடம் இருந்த பல்வேறு இடங்களை கைப்பற்றி உள்ளனர்.
அதைத்தொடர்ந்து முக்கிய நகரமான ஏடனை கைப்பற்றுவதற்காக சுற்றி வளைத்தனர். அவர்களுக்கு உதவியாக சவுதி அரேபியா விமானப்படைகள் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தன. இதன் விளைவாக 2 நாட்களுக்கு முன்பு ஏடன் பன்னாட்டு விமான நிலையத்தை அரசுப்படை கைப்பற்றியது. நேற்று முன்தினம் துறைமுகத்தை கைப்பற்றியது. நேற்று நகரின் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றி விட்டனர். இதனால் அங்கிருந்து கிளர்ச்சி படையினர் பின்வாங்கி ஓடுகிறார்கள். அவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது.


0 Comments