Subscribe Us

header ads

இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தை இன்று


பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பிலான இறுதிக் கட்ட இரு தரப்புப் பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இணைந்து போட்டியிடுவது தொடர்பில் கட்சியின் உயர் பீடம் கடந்த 2 ஆம் திகதி கூடி, இறுதித் தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை கட்சியின் தலைவரிடம் ஒப்படைத்துள்ளதாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் ஹஸன் அலி அறிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டும் என உயர் பீட உறுப்பினர்கள் பலர் வலியுறுத்தியுள்ளதாகவும், சேர்ந்து போட்டியிடுவதாயின் கட்சியின் நிபந்தனைகளை ஐக்கிய தேசியக் கட்சி கட்டாயம் ஏற்க வேண்டும் எனவும் உயர் பீடம் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அவர் கூறியள்ளார்.
ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் ஆறு மாவட்டங்களில் ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு ஏற்கனவே ஆலோசித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. 

Post a Comment

0 Comments