Subscribe Us

header ads

சந்தையில் மரக்கறிகளின் விலை வீழ்ச்சி


சந்தையில் மரக்கறிகளின் விலை கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவவிவசாய ஆராச்சி மற்றும் பயிற்சி நிலையம் அறிவித்துள்ளது.
போஞ்சி, கரட், கறிமிளகாய் மற்றும் செத்தல் மிளகாய் என்பனவற்றின் விலைகளை தவிர ஏனைய மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்துள்ளதாக நிலையத்தின் விநியோகம், உணவு தரம் மற்றும் வர்த்தக பிரிவின் பிரதானி டப்ளியூ.ஏ.எச் பிரியதர்ஷன தெரிவித்துள்ளார்.

பெரும்போக அறுவடைகள் சந்தைக்கு அதிகமாக கொண்டுவரப்பட்டுள்ளதால் மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் இந்த விலை வீழ்ச்சி காணப்பட கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments