(ஊடகவியலாளர் பாறுக் ஷிஹான்)
யாழ்ப்பாணம் காமால் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் பள்ளிவாசலின் எதிர்கால நிரந்திர வருமானத்திற்காக புதிதாக வாங்கிய காணியில் 10 அறைகளை அமைப்பதற்காக உதவிகளை எதிர்பார்க்கின்றார்கள்.
தற்போதைய நிர்வாகத்தினர் 11-2 பரப்பு காணி ஒன்றினை பல சகோதரர்களின் உதவியுடன் கொள்வனவு செய்துள்ளனர்.
அத்துடன் இக்காணியில் பள்ளியின் வருமானத்திற்காக 10 அறைகளை அமைப்பதற்காக திட்டமிட்டு உதவும் பரோபகாரர்களின் உதவிகளை எதிர்பார்த்துள்ளனர்.
எனவே யுத்தத்தினால் முற்றாக பாதிக்கப்பட்டு திருத்தப்பட்டுள்ள இப்பள்ளிவாசலின் நலனில் பங்கெடுத்தவர்களிற்கு நன்றிகளை தெரிவித்துள்ளதுடன் உதவிகளை செய்ய விரும்புவோர் கீழ்வரும் நிர்வாக உறுப்பினர்களுடன் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு கேட்டுள்ளனர்.
எம்.எஸ்.ஐ ஆரிபின் (செயலாளர்-0715604213, 0773689856)
எம்.ஆர் சாகுல் ஹமீது(கணக்காளர்-0776171263)





0 Comments