இப்தார் என்னும் நோன்பு திறக்கும் நிகழ்வுகளை உலகம் முழுவதும் உண்டான முஸ்லிம்கள் அவரவர் சக்திக்கு ஏர்ப்ப நடத்தி வருகின்றனர்
முஸ்லிம்கள் வாழும் அனைத்து பகுதிகளிலும் இப்தாருக்கு என்று சிறப்பு ஏர்பாடுகள் செய்யபடுவதர்கு காரணம் அது சிறப்பான நண்மைகளை பெற்று தரும் என்பது தான்
சவுதி அரேபியாவில் நீங்கள் திரும்பும் திக்கெல்லாம் இப்தார் மையங்களை பார்க்க முடியும் இப்தார் விசயத்தில் சவுதி அரசும் சவுதி நாட்டவர்களும் பிரத்தியோக கவனம் செலுத்துகின்றனர்
இப்தார் விருந்து என்பது நோன்பு வைக்கும் முஸ்லிம்களுக்காக தயார் செய்ய பட்டதாக இருந்தாலும் சவுதி அரேபியாவை பொறுத்தவரை இந்து நண்பர்களும் கிருத்துவ நண்பர்களும் கூட இதை பயன் படுத்தி கொள்கின்றனர்
சவுதி அரேபியாவின் அனைத்து பகுதிகளிலும் இப்தார் மையங்கள் இருப்பதால் நோன்பு திறக்கும் நேரத்தில் அங்கு பணியாற்றும் இந்து நண்பர்கள் கிருத்துவ நண்பர்கள் கூட இலவசமாக கிடைக்கும் அந்த சுவையான உணவை சுவைக்க முஸ்லிம்களை போன்று தங்களை காட்டி கொண்டு இப்தார் மையங்களில் குழுமி விடுகின்றனர்
இது பல இடங்களில் நிகழ்ச்சி ஏர்பாட்டாளர்களுக்கு தெரியாமல் இருந்தாலும் தெரிய வரும் இடங்களிலும் நிகழ்ச்சி ஏர்பாட்டாளர்கள் சகித்து கொள்கின்றனர்
முஸ்லிம் நோன்பாளிகளுக்காக மட்டுமே தயார் செய்ய படும் உணவை முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் விட்டு தரும் அளவிர்கு சகிப்பு தன்மை நிறைந்தவர்களாகவும் பொறுமை மிக்கவர்களாகவும் தான் முஸ்லிம்கள் உள்ளனர் என்பதர்கு இந்த இப்தார் நிகழ்வுகளும் சான்றாக மாறி வருகின்றன
படம்
எனது அலுவலக இப்தார் நிகழ்வின் போது எடுக்க பட்டது


0 Comments