Subscribe Us

header ads

போத்தலில் அடைத்த மஹிந்த எனும் பூதம் மீண்டும் வெளியே வர முடியாது: சரத் பொன்சேகா


மஹிந்த ராஜபக்ச என்ற பூதத்தை கடந்த ஜனவரி மாதம் 08ம் திகதி போத்தலில் அடைத்து மூடிப்போட்டு மூடியதாகவும், எனினும் கட்சிகாரர்கள் மூடியயை மீண்டும் திறந்து விட முயற்சிப்பதாக பீலட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அவிசாவல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஒருவராலும் தோல்வியடைய செய்ய முடியாதென கூறிய மஹிந்த ராஜபக்சவை நாங்கள் தோற்கடித்தோம்.

30 வருட யுத்தத்தினை ஒழுங்கான திட்டத்தின் மூலம் இரண்டு வருடங்களில் நிறைவடைய செய்தோம்.

யுத்தத்தை நிறைவடைய செய்தமையினால் சிறை வாழ்க்கை ஒன்றையும் மஹிந்த எனக்கு ஏற்படுத்தி கொடுத்தார்.

சிறைச்சாலையில் இருந்து வெளியேறியதும் அடுத்த திட்டமாக மஹிந்த ராஜபக்சவை வீட்டிற்கு அனுப்ப திட்டமிட்டேன்.

அந்தத் திட்டத்திற்கமைய 03 மாத செயற்பாடுகளின் மூலம் அவரை வீட்டிற்கு அனுப்பு வைத்தேன்.

எதிர்வரும் 17ஆம் திகதி எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மஹிந்த ராஜபக்ச என்ற பூதத்தை அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்கு இந்நாட்டு மக்கள் தயார் இல்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments