புன்னை ஒரு மரவகையைச் சேர்ந்தது. இது சற்று நீண்ட எதிர் அடுக்கில் அமைந்த பெரிய பச்சையான பளபளப்பான இலைகளையும் உருண்டையான உள் ஓடு உள்ள சதைக் கனிகளையும் உடைய பசுமையான மரம். இதன் இலை, பூ, விதை, பட்டை மற்றும் எண்ணெய் ஆகியன பயன் தருபவை.
ஒரு மரத்தின் காய் 100 கிலோ கிடைக்கும். அதில் 18 கிலோ எண்ணெய் கிடைக்கும். ஜோதிடத்தில் ஆயில்ய நட்சத்திரத்திற்குரிய மரம் புன்னை. இது நோயை குணமாக்கும் மரமாக விளங்கியுள்ளது. புன்னை கோயில்களிலும் வளர்க்கப்படுகிறது. புன்னை மரம் வலுவானது. இந்த மரத்தில் படகுகள் செய்வார்கள். வீடுகள் கட்டவும் பயன்படுத்துவார்கள்.
புன்னை சளி, ஒற்றைத் தலைவலி, தலைசுற்றல் கண் எரிச்சல், வாத நோய், தோல் வியாதி, வயிற்றுப் புண், வெட்டை, மேகப்புண், சொறி சிரங்கு குஷ்டம் ஆகியவைகளைக் குணப்படுத்தும். பூவை அரைத்துச் சிரங்கிற்குப் போடலாம். இலையை ஊறவைத்த நீரில் குளித்து வர மேகரணம், சொறி, சிரங்கு யாவும் மறையும். பூவை நிழலில் உலர்த்தித் தூள் செய்து ஒரு சிட்டிகை காலை, மாலை கொடுத்து வர டைபாய்டு நோய் தீரும்.
புன்னை எண்ணெய் பூசி வர மகாவாத ரோகம் முன் இசைவு, பின் இசைவு, கிருமி ரணம் சொறி சிரங்கு, குட்டரோகப் புண்கள் தீரும். புன்னை விதையை அரைத்துக் கொதிக்க வைத்துப் பற்றுப் போட முடக்கு வாதம், கீல்வாயு, வாதவலிகள் தீரும். புன்னையின் இலைகள் பூக்கள் மற்றும் பட்டையை அரைத்துப் பவுடராக்கி தினம் ஒரு வேளை கொடுக்க மூட்டுவலி, சொறி, சிரங்கு குஷ்டம் மேகம் ஆகியவை குணமாகும்.


0 Comments