Subscribe Us

header ads

இந்தியர்கள் சிறுநீரகங்களைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தையாக இலங்கை மாறிவருகிறது..


குடும்ப உறவினர் இல்லாதவரிடமிருந்து சிறுநீரக நோயாளி ஒருவர் சிறுநீரகங்களை பெறுவதை இந்திய அரசாங்கம் தடைசெய்துள்ளதால் சிறுநீரஙகளிற்காக இலங்கை செல்வது அதிகரித்துள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன..
சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்காக பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவரை போன்ற  நோயாளிற்கு பணம் ஓரு பிரச்சினையான விடயமல்ல, ஆனால் அவரது உறவினர்கள் மத்தியிலிருந்து சிறுநீரகமொன்றை பெறுவது அவரிற்கு சவாலான விடயமாக காணப்பட்டது.

சட்ட மன்ற உறுப்பினரான அவரது கணவர் இந்திய சட்டத்தினை மீறிசெயற்படவும் துணியவில்லை,பெங்களுர் மருத்துவர்களும் தங்களால் எதுவும் செய்யமுடியாது என கைவிரித்துவிட்டனர்.

எதுவும் சரிவராது, எல்லாம் முடிந்துவிட்டது என அவர் நினைத்துக் கொண்டிருந்த வேளையே இலங்கைக்கான அவரது பயணம் அவரிற்கு புத்துயுர் அளித்தது.அவர் புதிய சிறுநீரகத்துடன் நாடு திரும்பினார்.

சில குறிப்பிட்ட வகை சிறுநீரக வியாதிகள் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் உறுப்புகளை பெற்றுக்கொள்வதை இந்திய சட்டங்கள் தடைசெய்துள்ள நிலையில் பெங்களுரை சேர்ந்தவர்களிற்கான சிறுநீரக சந்தையாக இலங்கை மாறிவருகின்றது.

உறுப்புமாற்று சத்திரகிசிச்சைகளை மேற்கொள்ளும் மருத்துவர்கள் இதனை உறுதிசெய்கின்றனர்.

இலங்கையில் இந்த விடயத்தில் நெகிழ்ச்சியான சட்டங்கள் காணப்படுவதால் பெங்களுரிலிருந்து பல நோயாளிகள் இலங்கை செல்கின்றனர்.

இந்திய சட்டங்களின்படி நோயாளி ஓருவர் தன்னுடைய குடும்பத்தினரிடமிருந்து மாத்திரமே உறுப்புகளை பெற முடியும்.

குறிப்பிட்ட பெண்ணை பொறுத்தவரை அவரது வாகனச் சாரதியின்  குருதி வகை மாத்திரமே அவருடன் குருதி வகையுடன் பொருந்தியது. ஆனால் அவர் அவருடைய உறவினர் இல்லாததால் அவர் எதனையும் செய்ய முடியாத நிலை காணப்பட்டது. ஆகவே அவர் இலங்கைக்கு சென்று புதிய சிறுநீரகங்களுடன் நாடு திரும்பினார்.

2010 இலங்கை அரசாங்கம் சிறுநீரக பாதிப்பிற்குள்ளாகியுள்ள ஓருவர் தனது குடும்பத்தவர் இல்லாத ஓருவரிடமிருந்தும் உறுப்பை பெற்றுக்கொள்ளும் விதத்தில் சட்டங்களை தளர்த்தியது.

முதலில் இந்த நடைமுறை இலங்கையின் அரச மருத்துவமனைகளில் மாத்திரம் காணப்பட்டது. எனினும் பின்னர் தனியார் மருத்துவமனைகள் இதனை வணிகமயமாக்கி நாட்டிற்கு வெளியேயும் சிகிச்சையளிக்க தொடங்கின. இதன் பின்னரே பெங்களுர் போன்ற பகுதிகளிலிருந்து நோயாளிகள் இலங்கை செல்ல தொடங்கினர்.

இலங்கை போன்று ஈரான், சிங்கப்பூரிலும் இதனை செய்துகொள்ளலாம்.

எனினும் சிங்கப்பூரிற்கு செல்வதாயின் மருத்துவ விசாவை பெற்றுக் கொள்ளவேண்டும், மேலும் ஓரு கோடிக்கு மேல் செலவாகும், இலங்கையை பொறுத்தவரை விசா பிரச்சினையில்லை செலவு 10 முதல் 12 இலட்சம், இந்தியாவிலிருந்து சிறுநீரகங்களை பெற்றுக்கொள்வதற்காக ஓருவரை அழைத்துச்சென்றால் 25 இலட்சமாகும் என்றார் ஓரு மருத்துவர்.

இதேவேளை சிறுநீரக மாற்று சிகிச்சை செய்வதால் உண்டாகும் ஆபத்து குறித்தும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

சமீபத்தில் தன்னிடம் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஓருவர் தீடிரென காணமற்போனார், சில மாதத்தின் பின்னர் அவர் இலங்கையிலிருந்து புதிய சிறுநீரகத்துடன் திரும்பிவந்தார், அதனை பரிசோதனை செய்தபோது அது நோய் தொற்றுக்குள்ளானது என்பது தெரியவந்தது என்கிறார் அந்த மருத்துவர்.

Post a Comment

0 Comments