Subscribe Us

header ads

கொலையாளிகளை தண்டிக்க காவி உடையை துறக்கத் தயார் – பெத்தேகம சமித தேரர்


யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி படுகொலையாளிகளை தண்டிப்பதற்கு தமது காவி உடையை துறக்கத் தயார் என பெத்தேகம சமித தேரர் தெரிவித்துள்ளார்.

சமித தேரர் தென் மாகாணசபை உறுப்பினராக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தென் மாகாணசபையில் நேற்றைய தினம் நடைபெற்ற அமர்வுகளின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அண்மையில் யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த மாணவி சில காமுகர்களினால் கூட்டு வன்புனர்விற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்தக் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தால், அதனை நிறைவேற்றும் அலுகோசுவாக மாறத் தயார் என சமித தேரர் தெரிவித்துள்ளார்.பிள்ளைகளுக்காக நான் அலுகோசு பதவியை ஏற்றுக்கொண்டு மரண தண்டனையை நிறைவேற்றத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மரண தண்டனையை நிறைவேற்றும் அலுகோசுப் பணியை ஏற்றுக் கொள்ள எவரும் விரும்பவில்லை எனவும் சிலர் பணியை ஏற்றுக்கொண்டு பின்னர் கைவிட்டுச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனதை திடப்படுத்திக் கொண்டு மரண தண்டனை நிறைவேற்றிவிட்டு காட்டுக்குச் சென்று தியானம் செய்ய தாம் ஆயத்தமாகி வருவதாகவும், மாணவியின்; கொலையாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டால் நிச்சயம் அதனை நிறைவேற்றும் அலுகோசுவாக தாம் கடமைகளை பொறுப்பேற்றுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Post a Comment

0 Comments