வடகொரியா நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடந்து வருகிறது. அதன் அதிபராக கிம்ஜாங்உன் இருந்து வருகிறார். அந்த நாட்டில் சிறிய குற்றத்திற்கு கூட மரண தண்டனை விதிப்பது சர்வ சாதாரணமாக உள்ளது. அமைச்சர்கள், பெரிய அதிகாரிகள் கூட மரண தண்டனைக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் ஆமைப்பண்ணை மானேஜர் ஒருவருக்கு மரண தண்டணை விதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள டேடொங் ஆற்றின் ஓரமாக ஆமை பண்ணை ஒன்று செயல்பட்டு வந்தது. இங்கு வளர்க்கப்படும் ஆமைகள் சூப் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது.
இந்த ஆமை பண்ணையை கடந்த மே மாதம் அதிபர் கிம்ஜாங்உன் பார்வையிட சென்றார். அப்போது அந்த பண்ணையில் ஏராளமான ஆமை குஞ்சுகள் இறந்திருப்பது தெரியவந்தது. இதனால் ஊழியர்களை அதிபர் கடுமையாக கண்டித்தார்.
இந்த நிலையில் ஆமை பண்ணை மானேஜருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆமை பண்ணையை சரியாக பராமரிக்காததால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.


0 Comments