Subscribe Us

header ads

இனி சிக்னலில் சிகப்பு விளக்கைக் கடந்தும் போய்க்கொண்டே இருக்கலாம்: சைக்கிள் ஓட்டுபவர்கள் மட்டும்


கார், பைக் போன்ற வாகனங்கள் சிக்னலில் சிகப்பு விளக்கு எரியும்போது காத்துக்கொண்டிருக்கும் நிலையில் சைக்கிள் வைத்திருப்பவர்கள் மட்டும் சிக்னலைக் கடந்து செல்லும் புதிய வசதி பாரிஸில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய வசதியை நடைமுறைப்படுத்துவதற்கான சோதனையில் இந்த புதிய வசதியால் விபத்து ஏதும் ஏற்படாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது இருக்கும் போக்குவரத்து அமைப்பில், சைக்கிளில் செல்வோருக்கென பிரத்யேகமான எந்த சலுகைகளும் இல்லாததால், அவர்கள் மக்கள் நடக்கும் நடைபாதைகளிலும், கார்களுக்கான சிக்னல்களில் நின்றும் போகவேண்டியுள்ளது. அந்த பொது சிக்னலையே பின் தொடர வேண்டியுள்ளது.

இதைக் கருத்தில்கொண்டு, விபத்து நிகழாமல் இருக்கும்வண்ணம் குறுக்கு சாலைகள் உள்ள பகுதிகளில் கார் சிக்னலுக்கு கீழேயே சைக்கிள்களுக்கான தனி சிக்னல் இந்த ஜூலையிலிருந்து செப்டம்பருக்குள் அமைக்க இருப்பதாக நகர மேயர் தெரிவித்தார்.

கடந்த மார்ச் மாதம் முதல், காற்றில் ஏற்பட்ட கூடுதல் மாசு காரணமாக சாலையில் செல்லும் எரிவாயுவில் இயங்கும் கார்களை பாரிஸ் நிர்வாகம் குறைத்துள்ளது. மின்சார கார்களுக்கு இந்த தடை இல்லை.

2020-க்குள் மூன்று மடங்காக சைக்கிள் பயணத்தை உயர்த்த நினைக்கும் அந்நகர நிர்வாகம் 10,000 புதிய சைக்கிள் நிறுத்தங்களை அமைக்க இருக்கிறது. இதனால், மக்களின் பயணங்களில் 15% சைக்கிளில் செல்வதாக இருக்கும்.



Post a Comment

0 Comments