முஸ்லிம்களுக்கு கடந்த மூன்று வருங்களாக இலங்கையில் இருந்த அச்ச
சூழ்நிலைகளின்போது முஸ்லிம் அரசியல் பிரதிநிதித்துவத்தின் முக்கியம்
உணரப்பட்டது. அன்று உணரப்பட்டதை இன்று செயற்படுத்தும் காலம் வந்துவிட்டது
என கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சி சார்பில் பொதுத் தேர்தலில்
போட்டியிடும் மத்திய கொழும்பு ஐ.தே.க. பிரதான அமைப்பாளரும் மேல்மாகாண சபை
உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
மத்திய கொழும்பில் ஐக்கிய தேசியக்கட்சியின் பிரச்சாரப்பணிகளில் ஈடுபடும்
முக்கியஸ்தர்களை நேற்று முன்தினம் புதுக்கடையில் சந்தித்து கலந்துரையாடிய
போதே முஜிபுர் ரஹ்மான் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை ஒப்பிட்டு முஸ்லிம்கள் அரசியலில்
பக்குவமடைந்துள்ளனர் என உடனடியாக தெரிவித்து விட முடியாது. மக்கள் தமது
அரசியல் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் விடயத்தில் கூடுதல் கவனம்
செலுத்தவேண்டியுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அநுராதபுரத்தில் தர்கா
தகர்த்தனர். இது முஸ்லிம் சமூகத்தில் ஒரு பிரிவினரே அக்கரை காட்டினர். அது
உடைக்கப்பட வேண்டியது என இன்னொரு பிரிவு கூறியது. எமது சமூகத்தின்
ஒற்றுமையில்லா தனத்தை அறிந்துகொண்ட பேரினவாதிகள் அடுத்தடுத்து
பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்களை ஆரம்பித்தனர்.
2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி தம்புள்ளை பள்ளிவாசலை தகர்க்க
பேரினவாதிகள் புரப்பட்ட போது முஸ்லிம் மக்கள கொதித்தெழுந்தனர். பின்னர்
ரமழான் காலத்தில் குருணாகல் தெதுரு ஓயாகம, ஆரிய சிங்கள வத்தையிலும்
பள்ளிவாசல்களுக்கும் குர் ஆன் மதரஸாக்களுக்கும் எதிராக போர்கொடி
ஏந்தப்பட்டது. இராஜகிரிய, தெஹிவளை கல்விகாரை வீதியிலும் பீரிஸபு
மாவத்தையிலும் தொழுகை நடத்துவதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டது. கொஹிலவத்தை
பள்ளிவாசலுக்குள் புகுந்த சிலர் அட்டகாசம் புரிந்தனர். ரஷ்ய துதுவராலய
நிர்மான பணிகளுக்காக கொழும்பு, பௌத்தாலோக்க மாவத்தையிலுள்ள பள்ளிவாசலை
அகற்ற முயற்சி எடுக்கப்பட்டது. மூதூரிலும் கற்பிட்டியிலும் முஸ்லிம்களே
இல்லாத இடத்தில் சிலைகள் வைக்கப்பட்டது. பெருநாள் தினமொன்றி அநுராதபுரம்
புதிய நகர் மல்வத்து ஓயா ஒழுங்கையிலுள்ள பள்ளிவாசல்
தீக்கிரையாக்கப்பட்டதோடு பின்னர் அப்பள்ளி அங்கிருந்தே அகற்றப்பட்டது.
கருமலையூற்று பள்ளிவாசலை முற்றாக உடைத்துவிட்டு பள்ளிவாசல் என்ற பெயரில்
சிறிய கூடாரமொன்று அமைச்துக்கொடுக்கப்பட்டது. காலி ஹிரும்புர பள்ளிவாசல்
மீதும் கேகாளை நகரிலுள்ள பள்ளிவாசல் மீதும் கல்வீச்சு தாக்குதல்
மேற்கொள்ளப்பட்டது. மஹியங்கனையில் பள்ளிவாசல் மற்றும் மஹர சிறைச்சாலை
பள்ளிசல் என்பன மூடப்பட்டது. ஜெய்லானி பள்ளிவாசல் முற்றாக அகற்றப்பட்டது.
கிராண்பாஸில் பள்ளிவாசலுக்கு எதிராக பேரினவாத கும்பள் செயற்பட்டமையால்
புதிதாக நிர்மானிக்கப்பட்ட பள்ளிவாசல் இன்றும் மூடப்பட்ட நிலையில்
இருக்கின்றது.
ஹலாலுக்கு எதிர்ப்பை வெ ளியிட்டு அவ்விடயத்தை அகில இலங்கை ஜம்மியத்துல்
உலமா கையாள முடியாத நிலையை ஏற்படுத்தினர். அத்துடன் நின்றுவிடாது பெஷன்பக்,
நோலிமிட், பாமசிகள், ஹபாயா கடைகள் என பல வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு
தீக்கிரையாக்கப்பட்டது. கடைகளை மூடுமாறு அச்சுறுத்தப்பட்டது.
முஸ்லிம்களின் வர்த்தகத்தின் மீது பொறாமை கொண்ட பேரினவாதிகள் பல
சதித்திட்டங்களை அரங்கேற்றினர்.
இவற்றுக்கௌ்ளாம் மேலாக அளுத்கம, தர்கா நகர், பேருவளை, வெலிப்பனை, தந்துர,
பாணந்துர போன்ற பகுதிகளில் கலவரத்தை தூண்டிவிட்டு முஸ்லிம் சமூகத்தை
பீதிக்குள்ளாகினர்.
இந்த சந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்தில் 16 முஸ்லிம் உறுப்பினர்கள்
இருந்தனர். முஸ்லிம் கட்சிகளின்பேரில் பலர் இருந்தர். அவர்கள் இந்த
சந்தர்ப்பங்களில் முஸ்லிம் சமூகத்திற்காக பேசவில்லை. இதனால் ரணில் விக்கிரம
சிங்கவும் அநுர குமார திஸாநாயக்கவும் பாலித தெவரப்பெருமயும்
பாராளுமன்றத்தில் பேசவேண்டிய நிலைமை ஏற்பட்டது.
கடந்த ஜூன் மாதம் இடம்பெற் அளுத்கம விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தில்
விஷேட விவாதம் இடம்பெற்றது. இதில் அமைச்சர் ஹலீமும் முன்னாள் எம்.பி.
அஸ்வரும் மாத்திரமே உரையாற்றினர். இருந்தாலும் அஸ்வர் அப்போதைய அரசுக்கு
ஆதரவாகவே உரையாற்றினர். இதன்போதெல்லாம் மௌனமாக இருந்தவர்களுக்கு தகுந்த
பாடம் புகட்ட வேண்டும் என்று மக்கள் காத்திருந்தனர். அன்று விதைத்தற்கு
இன்று அறுவடை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் சில அரசியல்வாதிகள்
இருக்கின்றனர்.
மக்கள் ஏமாறக்கூடியவர்கள் என முஸ்லிம் அரசியல்வாதிகள்
நினைத்துக்கொண்டிருக்கின்றனர். அன்று பாராளுமன்றத்தில் இருந்த பெரும்பாலான
முஸ்லிம் உறுப்பினர்கள் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளனர். ஆனால் முஸ்லிம்
மக்கள் இம்முறை ஏமாந்துவிடக்கூடாது. அத்துடன் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை
காப்பாற்ற வேண்டிய தேவையும் இருக்கின்றது.
இதேவேளை, இன்று சில சிங்கள அரசியல் வாதிகள் நாம் முஸ்லிம்களுடன்
இருக்கிறோம் என பல இப்தார் நிகழ்வுகளிலும் முஸ்லிம் பிரதேசங்களுக்கும்
வந்து சொல்கின்றனர். குறிப்பாக புதுக்கடைக்கும் சில் சிங்கள அரசியல்வாதிகள்
வந்துபோகின்றனர். இன்னும் சிலர் வருவார்கள். இங்கு மட்டுமல்ல நாட்டிலுள்ள
நாட்டிலுள்ள எல்லா முஸ்லிம் ஊர்களிலும் இதே நிலைமை காணப்படுகின்றது.
இவர்கள் எப்போது எங்கு முஸ்லிம் சமூகத்திற்காக போராடினார்கள் என்று நாம்
கேட்க விரும்புகிறோம்.
உண்மையில் பேசிய அரசியல்வாதிகளை மக்கள் நன்கு அறிவார்கள். அத்தோடு சிங்கள
அரசியல்வாதிகளேல்லாம் முஸ்லிம்களுக்கு நெருக்கடியாக காலங்களில் கூட
அவர்களின் வாக்கு வங்கியை யோசித்து அமைதியாக இருந்ததே அதிகமாகும். அவர்கள்
முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அராஜகங்களை மனிதநேய அடிப்படையில்
நோக்கு பேசியது மிகவும் குறைவு என்று சொல்ல வேண்டும். இந்த விடயத்தில்
முஸ்லிம் பிரதிநிதிகளே பூச்சிய நிலையில் இருந்த போது பெரும்பான்மை
அரசியல்வாதிகளிடம் நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்.
அத்தோடு, சில முஸ்லிம் அரசியல்வதிகள் சில பிற்போக்கு அரசியலாலும்
சுயநலத்திற்காகவும் சில பெரும்பான்மை அரசியல்வாதிகளை அழைத்து வருவார்கள்.
இது விடயத்தில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.
இதனிடையே, அன்று வாய் மூடி இருந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் கூட உங்கள் வீடு
தேடி வரலாம். எனவே, மக்கள் இதனை சரியாக புரிந்துகொள்ள வேண்டும். அத்துடன்
ஊரிலுள்ள புத்திஜீவிகளும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் மக்களை
சரியாக வழிநடத்த வேண்டிய அவசியம் இருக்கின்றது என்றார்.
-Jaffna Muslim-


0 Comments