Subscribe Us

header ads

யார் என்ன சொன்னாலும் மஹிந்தவை பிரதமராக பதவியில் அமர்த்துவோம்!- சாலிந்த திஸாநாயக்க


யார் என்ன சொன்னாலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் அமர்த்த நடவடி;ககை எடுக்கப்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்த மிகப் பெரிய தவறு, சிறுபான்மை பலமுடைய தரப்பிற்கு அரசாங்கம் அமைக்க சந்தர்ப்பம் வழங்கியதாகும்.

மைத்திரி கடந்த காலங்களில் அரச தலைவர் ஒருவர் ஆற்றக் கூடிய வகையிலான உரைகளையா ஆற்றினார்.

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதற்காக எல்லாவற்றையும் அவ்வாறு செய்ய முடியாது

யார் என்ன சொன்னாலும் நாட்டின் அடுத்த பிரதமர் மஹிந்த ராஜபக்சவேயாகும்.

அவரை எவ்வாறு பிரதமராக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும் என சாலிந்த திஸாநாயக்க தம்புத்தேகமவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments