ஒரு மாற்றுத் திறனாளி மாணவர் பிரபல நைக் ஷு நிறுவனத்திற்கு எழுதிய கடிதம் பலரின் வாழ்க்கையின் சிரமத்தை குறைத்துள்ளது.
பெருமூளை வாதத்தால் பாதிக்கபட்ட 16 வயது மாணவரான மத்தேயு வால்ஷேர் கடந்த 2012-ல் பிரபல நைக் ஷு நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியான மார்க் பார்கர்க்கு ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் மாற்றுத் திறனாளியினர் எப்படி ஷு லேசை கட்ட சிரமப்படுகிறார்கள் என்று விளக்கி, உதவி செய்யும் படி கேட்டிருந்தார். தற்போது அதற்கான பலன் கிடைத்துவிட்டது.
நைக் நிறுவனத்தின் வடிவமைப்பாளர் டோபி ஹாட்பீல்டு ஒட்டிக்கொள்ளும் வகையில் புதிய ஷூ ஒன்றை உருவாக்கியுள்ளார். இதை மாற்றுத் திறனாளிகள் யாறுடைய உதவியும் இல்லாமல் அணிந்துக்கொள்ள முடியும். இது பற்றி வடிவமைப்பாளர் கூறுகையில் ”சில நேரத்தில் சிலர் மற்றவர்களை விட விரைவில் இயலாமையால் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் இறுதியில் நாம் அனைவரும் மற்றவர்களை நம்பி வாழ வேண்டியுள்ளது” என கூறியதை யாராலும் மறுக்க முடியாது.
மனதை நெகிழச் செய்யும் வீடியோ இதோ....


0 Comments