Subscribe Us

header ads

நோன்புப் பொருநாளை முன்னிட்டு 200-க்கும் மேற்பட்ட கைதிகளை விடுதலை செய்தது சிரியா



நோன்புப் பொருநாளை முன்னிட்டு தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் 25-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 240 பேரை சிரியா அரசு விடுதலை செய்துள்ளதாக வக்கீல் மற்றும் மனித உரிமை ஆர்வாலர் மிட்செல் ஷம்மாஸ் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் ஷியா பெரும்பான்மை அரசை எதிர்த்து சிறுபான்மை சன்னி கிளர்ச்சியாளர்கள் ஆயுத போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த சில வருடங்களாக நடைபெற்று வரும் இந்த உள்நாட்டு போர் காரணமாக லட்சக்கணக்காக மக்கள் அகதிகளாக வெளியேறியுள்ளனர். அரசுக்கு எதிராக செயல்பட்டோரை அரசு கைது செய்து தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து வருகிறது.

இப்படி ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனவர். அவர்களில் சிலபேரை இன்று விடுதலை செய்துள்ளது சிரியா.

சிரியாவில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் குழந்தைகள் உள்பட 13 ஆயிரம் பேர் சிறையில் சித்ரவதைக்கு உட்பட்டு மரணம் அடைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

கடந்து ஆண்டு சிரியா அதிபர் பஷார் அல்-ஆசாத் அயிரக்கணக்கான அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க உத்தரவிட்டார். ஆனால், சில நூறு பேர்தான் விடுதலை செய்யப்பட்டனர் எனறு சமூச ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

0 Comments