கத்தார் கலைஞர் மன்றம் உதயம்
கத்தார் வாழ் இலங்கை கலைஞர்களை ஒன்றிணைக்கும் ஒரு முயற்சி கத்தார் வாழ் இலங்கை கலைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து கத்தார் கலைஞர் மன்றத்தை இன்று (10) அங்குராப்பணம் செய்துவைத்துள்ளனர்.
கத்தார் வாழ் இலங்கை மக்களுக்கென பல்வேறு அமைப்புக்கள் இயங்கிவந்தாலும் கலைஞர்கள், படைப்பாளிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊக்குவிக்கும் எந்த அமைப்புக்களும் இதுவரை இல்லை என்பதை கவனத்தில்கொண்டு அதேநேரம் எங்களை நாங்களே தத்தெடுக்கும் ஒரு முயற்சியாய் இந்த மன்றத்தை ஆரம்பித்துள்ளனர்.
இதன் அங்குராப்பண நிகழ்வில் கீழ்வரும் நிருவாகம் ஏகமனதாக நியமிக்கப்பட்டுள்ளது; தலைவர் எழுத்தாளர் இஸ்ஸதீன் றிழ்வான் செயளாலர் Free visa குறும்பட இயக்குனர் ஸம்சுல் A ரசீட் பொருளாலர் Free visa குறும்பட துணைநடிகர் ஜமால்தீன் முஹம்மத் மிஹ்லார் ஒருங்கிணைப்பாளர் Free visa குறும்பட துணைநடிகர் முஹம்மத் இம்தாஸ்
இலை மறை காய்களாய் ஆங்காங்கே மறைந்து வாழும் எம்மவரை இணைத்துகொண்டு தடைகளை தாண்டி புதிய, அசத்தலான படைப்பாளிகளை வெளிகொணரும் முயற்சி வெற்றி பெற உங்களுடைய ஒத்தாசை எங்களுக்கு தேவை இந்த அமைப்புடன் இணைந்து பயணிக்க விரும்பும் கத்தார் வாழ் சகோதர்கள் எங்களுடன் இணைந்துகொள்ளலாம்.
தொடர்புகொள்ள வேண்டிய தொலலைபேசி இலக்கம் 77601905
Facebook link: https://www.facebook.com/pages/Qatar-Artist-forum/1658027554431773?notif_t=fbpage_fan_invite




0 Comments