Subscribe Us

header ads

இலங்கை அணியில் புதிய இரண்டு வீரர்கள் இணைப்பு


இலங்கை- – பாகிஸ்தான் கிரிக்கெட் அணி­க­ளுக்கு இடை­யி­லான மூன்று போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்­றுடன் முடி­வ­டைந்­தது.

இதை­ய­டுத்து இரு அணி­க­ளுக்கு இடை­யி­லான ஐந்து போட்­டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் எதிர்­வரும் 11ஆம் திகதி ஆரம்­ப­மா­கின்­றது. இதற்­கான இலங்கை அணி அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதில் சிறி­வர்­தன, பதி­ரண என்ற இரண்டு புது­மு­கங்­க­ளுக்கு வாய்ப்பு கிடைத்­துள்­ளது.
29 வய­தாகும் சிறி­வர்­தன உள்ளூர் போட்­டி­களில் சிறப்­பான ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார். அவர் 19 முதல்­தர போட்­டி­களில் 1144 ஓட்­டங்­களைக் (சரா­சரி 67.29) குவித்­துள்ளார்.
பதி­ரண லிஸ்ட் ஏ போட்­டி­களில் 86 விக்­கெட்­டுகள் வீழ்த்­தி­யுள்ளார். டெஸ்ட் போட்­டியில் இடம் பெற்­றி­ருந்த ரங்­கன ஹேரத், கௌஷால், நுவான் குலசேகர, தம்மிக பிரசாத் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments